உலகம்

கடலில் விழுந்த மொபைலை வாயால் எடுத்து வந்து கொடுத்த திமிங்கலம்! வைரலாகும் வீடியோ

Summary:

Whale picked and returned mobile from ocean

உலகத்தில் என்னவோ அதிசயங்கள் நடந்து வருகிறது. அந்த வரிசையில் திமிங்கலம் ஒன்று செய்த அதிசய செயல் ஒன்று வீடியோவாக வைரலாகி வருகிறது. 

கடந்த திங்கட்கிழமை நார்வேயை சேர்ந்த ஈசா ஓப்தால் என்ற பெண்மனி தனது நண்பர்களுடன் படகு ஒன்றில் ஹாமர்பெஸ்ட் துறைமுகம் அருகே கடலில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது மொபைல் போன் கடலுக்குள் விழுந்தவிட்டது. 

அதன் பிறகு சிறிது நேரத்தில் வெள்ளை நிறத்திலான திமிங்கலம் ஒன்று அவர்களை நோக்கி வருவதை அவர்கள் கண்டனர். இதில் ஆச்சரியம் என்னவெனில் அந்த திமிங்கலத்தின் வாயில் கீழே விழுந்த மொபைல் போன் இருந்தது தான். 

வாயில் மொபைலை கவ்வியவாறு வந்த திமிங்கலம் மொபைலை அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு மீண்டும் தண்ணீருக்குள் சென்றுவிட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற அவர்கள் அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். 

பின்னர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவிக்கையில், அந்த திமிங்கலம் ரஷ்யாவை சேரந்ததாக இருக்கலாம் என்றும், ரஷ்யா ராணுவத்திலிருந்து தப்பித்து வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். 


Advertisement