உலகம் லைப் ஸ்டைல்

காதலனை பார்க்க ஆசையோடு சென்ற பெண்! காதலன் கூறிய ஒற்றை வார்த்தையால் திரும்பி வந்த சோகம்.

Summary:

Want my 90 euro back because my date called me fat

வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலனை காண்பதற்காக சுமார் 100 பவுண்ட் வரை செலவு செய்து மூன்று மணி நேரங்கள் பயணம் செய்துள்ளார். காதலன் வருவதாக கூறிய இடத்திற்கு ஆசையுடன் சென்றுள்ளார் ஜடே சவஜே என்ற அந்த 28 வயது பெண். தன்னை பார்த்ததும் அன்பே ஆருயிரே என காதலன் பாச மழை பொலிவான் என எதிர்பார்த்த அந்த பெண்ணிற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், தனது காதலியை பார்த்ததும் அந்த பெண்ணின் காதலன் நீ முன்பை விட தற்போது சற்று குண்டாகிவிட்டதாக கூறியுள்ளார். இத்தனைக்கும் இவர்கள் இருவரும் ஒரு மாதத்திற்கு முன்புதான் சந்தித்துள்னனர். வெளிநாட்டை பொறுத்தவரை தோற்றத்தின் ரீதியாக ஒருவரை குறைகூறுவதை பெரிய விஷயமாக பார்க்கிறார்கள்.

தனது காதலன் இப்படி கூறியதும் அதிர்ச்சியான அந்த இளம் பெண் சரி பரவாயில்லை என கூறிவிட்டு காதலனுடன் காரில் சென்றுள்ளார். காரில் செல்லும்போது இதுகுறித்து அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் வந்துள்ளது. இறுதியில் அந்த பெண்ணின் காதலன் அந்த பெண்ணை காரில் ஏற்றிய இடத்திலையே இறக்கிவிட்டுவிட்டு சென்றுள்ளார்.

இவ்வளவு செலவு செய்து, நீண்ட தூரம் பயணம் செய்தும் தனது காதலனால் தனக்கு ஏற்பட்ட மன கஷ்டத்தை கூறி தான் செலவு செய்த பணத்தை யாராவது திருப்பி கொடுங்கள் என ஒரு இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளார் அந்த பெண். விளம்பரம் போட்ட சில நேரங்களிலையே அந்த பெண்ணிற்கு 370 பவுண்ட் அளவில் உதவிகள் கிடைத்துள்ளது.


Advertisement