பாம்புக்கு பயந்து உரிமையாளர் செய்த காரியம்.. கரிக்கட்டையாய் போன வீடு.!

பாம்புக்கு பயந்து உரிமையாளர் செய்த காரியம்.. கரிக்கட்டையாய் போன வீடு.!


us-washington-dc-poolesville-man-fired-burn-house-avoid

பாம்பு தொல்லையிலிருந்து விடுபட நபரொருவர் வீட்டையே கொளுத்திய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டி.சி அருகே இருக்கும் பூலஸ்வில்லே (Poolesville) பகுதியைச் சார்ந்த இடத்தில் பெரிய வீடு உள்ளது. இவரது வீட்டிற்கு அடிக்கடி பாம்பு அலையாத விருந்தாளியாக வந்து செல்வது வழக்கம் என்றும் கூறப்படுகிறது. 

America

பாம்புகளின் நடமாட்டத்தை தடுக்க வீட்டின் உரிமையாளர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பலன் இல்லாத நிலையில், பாம்பு நடமாட்டத்தை தடுக்க வீட்டின் உரிமையாளர் விபரீத முடிவு எடுத்துள்ளார்.

America

தனது வீட்டில் உள்ள பொருட்களை முன்னதாகவே மாற்றி வைத்த உரிமையாளர், ரூ.,14 கோடி மதிப்புள்ள வீட்டினை தீ வைத்து கொளுத்தி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.