உலகம் Covid-19

62 நாட்கள் கொரோனா சிகிச்சை..! 181 பக்கம் கொண்ட சிகிச்சைக்கான பில்..! 8.14 கோடி கட்டணம்..! எங்கு தெரியுமா..?

Summary:

US COVID-19 Survivor Receives dollar 1 point 1 Mn Hospital Bill

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 62 நாட்கள் சிகிச்சை எடுத்துவந்த அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவருக்கு மருத்துவமனை நிர்வாகம் சுமார் 8 கோடி சிகிச்சை கட்டணமாக விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 70 வயது நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்கள் சாதாரண சிகிச்சைக்கு பிறகு, அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து சுமார் 29 நாட்கள் வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய இறக்கும் நிலையில் இருந்த அந்த நபர் கிட்டத்தட்ட 62 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கொரோனா வைரஸில் இருந்து மீண்டு நலம் பெற்றார். இந்நிலையில் வீட்டிற்கு செல்லும் முன் அவருக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான பில் அவரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆம், சுமார் 181 பக்கங்கள் கொண்ட கட்டண ரசீதை மருத்துவமனை நிர்வாகம் அவருக்குவழங்கியுள்ளது, மேலும்  சிகிச்சை கட்டணமாக அமெரிக்க மதிப்புப்படி சுமார் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 8.14 கோடி கட்டணமாக அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.


Advertisement