குழந்தை தாயின் வயிற்றில் இருந்து கூட வெளியே வரவில்லை..! வயிற்றில் இருந்துகொண்ட கொரோனாவை எதிர்த்துப் போராட தாய்க்கு தைரியம் கொடுத்தது..!Unborn baby relieves worried mother from coronavirus anxiety

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் உலக மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. உலகளவில் இதுவரை பலலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளநிலையில் இறப்பு எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா சமயத்தில் கர்ப்பமாக இருக்கும்நிலையில் கொரோனாவை நினைத்து மிகவும் பயந்துள்ளார். மேலும், தனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா கொரோனாவிலிருந்து இறந்துவிட்டார் என்பதை அறிந்ததும் அந்த பெண் மேலும் திகிலடைந்துள்ளார்.

இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவரிடம் செல்ல வேண்டியிருந்தது. அங்கு அவருக்கு மருத்துவர் அல்ட்ராசவுண்ட் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார். பரிசோதனையின் போது அந்தப் பெண் திரையைப் பார்த்தபோது அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.

Mysterious

காரணம், வயிற்றில் இருந்த அவரது குழந்தை தனது கையை அசைத்து சமாதான அடையாளத்தை உருவாக்குவது போல் தனது இரண்டு விரல்களை காட்டியுள்ளது, அமைதிக்கான செய்தியைக் கொடுப்பது போல இருந்த அந்த காட்சியை கண்டதும் அந்தப் பெண் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.

மேலும் அந்த குழந்தை தனது இரண்டு விரல்களை காட்டும் புகைப்படமும் உலகம் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. கருப்பையில் இருக்கும் ஒரு குழந்தை தனது தாயின் உணர்வுகளை நன்றாக உணர முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.