உலகம் லைப் ஸ்டைல் டெக்னாலஜி

வீடியோ: துபாய் வானில் தெரிந்த இரண்டு நிலவுகள்.. அதற்கு பின்னால் உள்ள துபாய் அரசின் வேலை.. வைரல் வீடியோ..

Summary:

துபாயில் விண்ணில் இரண்டு நிலவுகள் தெரிவதுபோல் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக

துபாயில் விண்ணில் இரண்டு நிலவுகள் தெரிவதுபோல் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஐக்கிய அரபு அமீரக அரசு செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. இதற்காக செவ்வாய் கிரகத்தின் புவிவிட்ட பாதையில் ஐக்கிய அரபு அமீரக அரசு அனுப்பியுள்ள விண்கலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக மக்களுக்கு விழுப்புணர்வை ஏற்படுத்த துபாய் அரசு முயற்ச்சி செய்துள்ளது.

அதன்படி, 100 மீட்டர் உயரம் கொண்ட இரண்டு ராட்சச கிரேன் மூலம் 40 மீட்டர் திரை ஒன்றை நிறுத்தி, அதில் செவ்வாய் கிரகத்தை சுற்றியுள்ள போபோஸ் மற்றும் டீமோஸ் என்ற நிலவின் பிம்பத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த நிலவின் பிம்பமானது துபாய் அரசு நிறுவியுள்ள திரை மூலம் அல்குத்ரா பாலைவனத்தின் வானில் தெரிய தொடங்கியது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மேலும், பார்ப்பதற்கு இரண்டு நிலவுகள் விண்ணில் தெரிவதுபோன்று இருந்த இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement