உலகம்

2 வயது குழந்தையை 5 வயது குழந்தையிடம் விட்டு சென்ற தாய்! திரும்பி வந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி!

Summary:

Two babies die in water at france

பிரான்ஸ் நாட்டில் அக்கா மற்றும் தம்பி இருவரும் ஆற்றில் மூழ்கி உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 35 வயது தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் சாலை அருகே நிற்கவைத்துவிட்டு அருகில் இருக்கும் துரித உணவகம் ஒன்றுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குழந்தைகள் நின்றுகொண்டிருந்த சாலை ஓரத்தில் ஆறு சென்றுள்ளது. இதில், 2 வயது குழந்தை விளையாடிக்கொண்டிருக்கையில் ஆற்றில் விழுந்துள்ளான். தனது தம்பியை காப்பாற்றுவதற்காக 5 வயது பெண் குழந்தையும் ஆற்றுக்குள் குதிக்க இருவரும் நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு குழந்தைகளையும் மீட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement