உலகம் Covid-19

ஒரு மாதத்திற்கு பின் தனது மகளை சந்தித்த தாய்..! அம்மா.. அம்மா..! கண்ணீர் கடலில் மகள். வைரல் வீடியோ.

Summary:

Turkey doctor mother meets six year old daughter after month video

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க ஒரு மாதம் தனது மகளை பிரிந்திருந்த தாய், மீண்டும் தனது மகளை பார்க்கும்போது தாய் - மகள் இடையே நடந்த பாச போராட்டம் பார்ப்போரை கண்கலங்க வைக்கின்றது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கியில் ஓஸ்ஜி கொகேக் என்ற பெண் மருத்துவர் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை வழங்குவதால் பாதுகாப்பு கருதி அவர் ஒருமாதம் மருத்துவமனையிலையே தங்கியுள்ளார். இதனால் தனது 6 வயது மகளை தனது தாய் வீட்டில் விட்டுவிட்டு ஓஸ்ஜி கொகேக் மருத்துவ பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், மருத்துவ பணிக்காக சென்று ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், தனது மகளை நேரில் காண ஓஸ்ஜி கொகேக் வீட்டிற்கு வந்துள்ளார். மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அவர் விளையாடிக்கொண்டிருந்த இடத்திற்கு சென்று தாய் தனது மகளை அழைக்கிறார்.

ஒரு மாதம் கழித்து தனது தாய்யை பார்க்கும் அந்த குழந்தை முதலில் கோபத்தில் தனது கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக நிற்கிறது. பின்னர் தனது மகளை ஓஸ்ஜி கொகேக் இருக்க அணைத்து முத்தமழை பொழியவே, தனது தாய்யை கட்டிப்பிடித்து அந்த குழந்தையும் தேம்பி தேம்பி அழுகிறது.

இந்த காட்சி வீடியோவாக வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது. தாய் - மகளின் இந்த பாச போராட்டத்தை பார்ப்போருக்கு சற்றும் கண்கலங்காத்தான் செய்கிறார்கள்.


Advertisement