உச்சகட்ட பரபரப்பில் அமெரிக்கா.! டிரம்ப் போட்ட ஒத்த ட்வீட்.! மொத்தமாக சோலியை முடித்த ட்வீட்டர்.!

உச்சகட்ட பரபரப்பில் அமெரிக்கா.! டிரம்ப் போட்ட ஒத்த ட்வீட்.! மொத்தமாக சோலியை முடித்த ட்வீட்டர்.!



trumph twitter account freezing

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்தது.  இதில், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். இந்தநிலையில், ஜோ பைடன் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்கவுள்ளார்.

ஜோ பைடன் வெற்றி பெற்றதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க நாடாளுமன்றம் கூடியது. இதற்கான இரு அவையின் கூட்டுக் கூட்டத்தில், தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில், ஜோ பைடனை அதிபராக அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கேபிடால் நகரில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். 

அங்கு நடந்த வன்முறையில், துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு நிலைமை விபரீதமானது. துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பாராளுமன்றத்தை சுற்றிலும் தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இந்தநிலையில் டொனால்டு ட்ரம்ப் அவரது ட்விட்டர் பக்கத்தில், “இத்தேர்தல் தங்களிடமிருந்து திருடப்பட்ட ஒரு தேர்தல். இது ஒரு மகத்தான தேர்தல் என்பதை அனைவரும் அறிவர். நமக்கு அமைதி வேண்டும். நாம் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வன்முறைக்கு காரணம் டிரம்ப் பேசியது தான் என அதிபர் டிரம்ப் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது. இதுகுறித்து ட்வீட்டர் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், அதிபர் டிரம்பின் டிவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்படும். மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.