உலகம்

டிரம்புடன் நெருக்கமாக இருந்த அமெரிக்க உயர் அதிகாரிக்கு கொரோனா; கலக்கத்தில் உலகத் தலைவர்கள்.!

Summary:

Trump America nation security officer affected by the corona

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஒ பிரெயினிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட உலக நாடுகளுக்குச் சென்று முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வந்துள்ளார்.

ராபர்ட் ஒ பிரெயினும் அதிபர் ட்ரம்ப்பும் பல நேரங்களில் நேரடி தொடர்பிலிருந்தவர்கள். இதனால் ட்ரம்பிற்கும் கொரோனா பரவியிருக்குமா என அச்சம் ஒருபுறம் எழுந்துள்ளது. ஆனால், இருவரும் இறுதியாக எப்போது சந்தித்துக் கொண்டனர் என்ற அதிகப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

ஊடகங்களில் பதிவான தகவலின்படி, கடந்த 10ஆம் தேதி இருவரும் அமெரிக்கா ஃபுலோரிடா மாகாணத்தில் அரசு வேலையாக சென்றுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒ பிரெயினிற்கு கொரோனா உறுதியான தகவல் குறித்து அரசு இப்போதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஒ பிரெயினுடன் பணிபுரியும் அதிகாரிகள் மட்டத்திலிருந்து பத்திரிகைகளுக்கு வெளியான தகவலின் அடிப்படையிலே இச்செய்தி வெளியாகியுள்ளது. இதனால் உலகத்தலைவர்கள் பலரும் கலக்கத்தில் உள்ளார்கள். அமெரிக்காவின் மிக உயரிய பொறுப்பிலிருக்கும் நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.


Advertisement