உலகம்

பேருந்தில் பயணம் செய்த சீக்கிய யாத்ரீகர்கள்! பேருந்தின் மீது ரயில் மோதி 19 பேர் உயிரிழப்பு!

Summary:

train and bus accident in pakistan

பாகிஸ்தானின் ஷேக்புரா மாவட்டத்தின் பரூக்காபாத் ரயில் நிலையம் அருகே பேருந்து மீது ரயில் மோதியதில் 19 பேர் உயிரிழந்தனர். சீக்கிய யாத்ரீகர்கள் சாஹிப் வழிப்பாட்டுத் தளத்தில் இருந்து லாகூர் வழியா ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சேக்குவாரா என்ற பகுதியில் ஆள் இல்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது பேருந்து மீது ரயில் மோதியது. 

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்தில் 19 பேர் பலியாகினர்.  பலர் காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், விபத்தில் உயிரிழந்துள்ள யாத்ரீகர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு அவர் அதிகாரிகளிடம் கேட்டுகொண்டுள்ளார்.

ரயில்வே அதிகாரிகள் பலர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ரயில் விபத்து தொடர்பாக விசாரிக்க உயர்மட்டக்குழுவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 


Advertisement