உலகம்

நீயெல்லாம் ஒரு அப்பாவா? பெற்ற தந்தையை 30 தடவைக்கு மேல் கத்தியால் குத்தி குத்தி கொலை செய்த 3 மகள்கள்.

Summary:

Three sisters killed their father in Russia

ரஸ்யாவின் தலைநகர் மாஸ்க்கோவை சேர்ந்தவர் மைக்கேல் கச்சத்துரியன். 57 வயதான இவருக்கு கிறிஸ்டினா(19), ஏஞ்சலினா(18), மரியா கச்சத்துரியன்(17) என்ற 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக மைக்கேல் கச்சத்துரியன் தனது மூன்று மகள்களுக்கும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பாலியல் தொல்லைகளை கொடுத்துவந்துள்ளார். மேலும், வெளி ஆட்கள் யாருடனும் பேசக்கூடாது, அதை செய்யக்கூடாது, இதை செய்யக்கூடாது என பல்வேறு விதிகளை விதித்துள்ளார்.

இதனால் கொடுமையின் உச்சத்திற்கு சென்ற 3 சகோதரிகளும் தங்கள் தந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்னனர். அதன்படி கடந்த ஆண்டு தங்கள் தந்தை தனது அறைக்கு உறங்க சென்றதும் மூவரும் அவரது அறைக்கு சென்று அவரது தலையில் பலமாக தாக்கியுள்ளனர்.

பின்னர் மூவரும் சேர்ந்து கத்தியால் தங்கள் தந்தையை முப்பது தடவைக்குமேல் குத்தியதோடு அந்த காயத்தின் மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்து அவரை மேலும் துடிக்க வைத்துள்ளனர். இறுதியில் அவர் இறந்ததை உறுதி செய்தபிறகு அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்னனர்.

இந்நிலையில் இந்த வழக்கு அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் மூன்று சகோதரிகளையும் விடுதலை செய்யக்கோரி லட்சக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Advertisement