உலகம்

கருப்பு பூனையும் விஷ பாம்பும் நண்பர்களாக பழகும் அதிசயம்..! உங்களை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் புகைப்படம் உள்ளே.!

Summary:

This unlikely black cat and snake friendship will make you do a double-take

இந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களும் மிகவும் வித்தியாசமானது. சில உயிரினங்கள் சிலவற்றுடன் நட்பாக பழகுவதும், அதேவே வேறு சில உயிரினங்களுடன் பகைமை பாராட்டுவதும் வழக்கமான ஓன்று.

அதிலும் சில வித்தியாசமான உயிரினங்கள் தங்கள் எதிரிகளுடன் கூட நெருக்கமாக பழகும் சம்பவங்களும் அங்கங்கே நடந்துதான் வருகிறது. உதாரணத்திற்கு, மான் குட்டியை அரவணைக்கும் புலி, பூனையுடன் விளையாடும் கிளி, நாயுடன் நட்பு பாராட்டும் குரங்கு இப்படி பல விசித்திரமான சம்பவங்களும் நடப்பது உண்டு.

அந்த வகையில் பூனையும், பாம்பும் நண்பர்களாக பழகிவரும் புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகவிருக்கிறது. கருப்பு பூனை ஓன்று பாம்பு ஒன்றுடன் பழகும் புகைப்படத்தை ditch pony என்ற ட்விட்டர் பயனர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட தற்போது அந்த புகைப்படம் செம வைரலாகிவருகிறது.


Advertisement