கணித்ததை விட வேகமாக அதிகரிக்கும் கடல் நீர் மட்டம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!



the-sea-water-level-will-increase-faster-than-predicted

உலகில் கடல் நீர்மட்டம் முந்தைய கணிப்பை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வானது 2018 செலுத்தப்பட்ட ICESat-2 என்ற நாசா செயற்கைக்கோள் அளவிடுகளைக் கொண்டு கடல் நீர் மட்டும் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் கடலுக்கும் நிலப்பரப்பிற்குமேயான உயரம் மிகக் குறைவாகவே இருப்பதாகவும் மேலும் பனிப்பாறைகள் உருகி கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 2100 ஆம் ஆண்டுகளில் கடல் மட்டமானது 1.1 மீட்டர் வரை உயரும் என இந்த ஆய்வு சுட்டி காட்டுகிறது.

மேலும் கடல் நீர்மட்டமானது 2 மீட்டர் அதிகரிக்குமேயானால் பாங்காக்கின் பெரும்பகுதியையும் உலகம் முழுவதும் 24 கோடி மக்களையும் கடல் மட்டத்திற்கு கீழே வைக்ககூடும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது