500 அடி உயர தூணில் ஏறி செல்பி எடுத்த இளைஞர்..! அடுத்து நடந்தது என்ன.? வைரலாகும் வீடியோ காட்சி.!

500 அடி உயர தூணில் ஏறி செல்பி எடுத்த இளைஞர்..! அடுத்து நடந்தது என்ன.? வைரலாகும் வீடியோ காட்சி.!



Terrifying moment teenage daredevil risks his life to climb Forth Road Bridge in Scotland

ஸ்காட்லாந்த்து நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் 500 அடி உயரமுள்ள பாலத்தில் ஏறி செல்பி எடுத்ததும், பின்னர் ஆபத்தான முறையில் பாலத்தில் இருந்து கீழே இறங்கும் காட்சிகளும் விடியோவாக வெளியாகி வைரலாகிவருகிறது.

ஸ்கடலாந்து நாட்டின் ஃபோர்த் நதியில் கட்டப்பட்டுள்ள தொங்கு பலமானது மிகவும் பிரபலமான ஒன்று. இந்த பாலத்தில் 500 அடி உயரத்திற்கும் மேலாக தூண்கள் பொருத்தப்பட்டு, அந்த தூண்களில் இருபுறத்தையும் இணைக்கும் வகையில் கம்பிகள் போடப்பட்டிற்கும்.

இந்நிலையியல் இந்த ஆபத்தான பாலத்தின் தூண் மீது எறியுள்ளார் 19 வயதான ஆடம் லாக் என்ற இளைஞர். நண்பர்கள் சிலருடன் இந்த முயற்சியை மேற்கொண்ட அவர் பாலத்தின் ஆபத்தான கம்பிகளை பிடித்துக்கொண்டு பாலத்தின் உச்சிக்கு எறியுள்ளார். பின்னர் அங்கிருந்தவாறு வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துக்கொண்ட அவர் பின்னர் அங்கிருந்து கீழே இறங்குகிறார்.

முதலில் காம்பியை பிடித்துக்கொண்டு இறங்கிய அவர் பின்னர் கம்பியில் இருந்து கைகளை எடுத்துவிட்டு மிகவும் ஆபத்தான, குறுகலான அந்த தூண் வழியாக ஓடுகிறார். பார்க்கும்போது பயத்தை ஏற்படுத்துவது போல் அமைந்துள்ள இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

அதேநேரம், ஆலம் லாக் தூணில் ஏறிய விஷயம் தெரிந்த போலீசார் அவர் கீழே இறங்கி வருவதற்காக காத்திருந்தநிலையில் அவர் கீழே வந்ததும் அதே இடத்தில் வைத்து அவரை கைதுசெய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.