உலகம்

வறுமையின் காரணமாக பாலியல் தொழிலுக்கு சென்ற ஆசிரியை!. அதிர்ச்சி சம்பவம்!.

Summary:

teacher sexual work for poverty


வெனிசுலா நாடு கடும் பொருளாதார நெருக்கடியால் திணறி வருகிறது. இதனால் லட்சக்கணக்கில் பொதுமக்கள் வெனிசுலாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர்.

ஜனாதிபதி மடுரோவின் புதிய பொருளாதார கொள்கைகள் உரிய பலனை தராதது மட்டுமின்றி கடும் நெருக்கடியையும் உருவாக்கியது.

இங்குள்ள மக்கள் பெரும்பாலும் அண்டை நாடான கொலம்பியாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதில், ஆசிரியர்கள், போலீஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என, பட்டினிக்கு அஞ்சிய பலரும் சொந்த நாட்டை விட்டு வெளியேறினர்.

குடும்பவறுமை, தங்களது பிள்ளைகளின் உணவு தேவைகளுக்காக பெரும்பாலான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வெனிசுலாவில் ஆசிரியர் பணியில் இருந்த பெண்மணி ஒருவர் தமது குடும்பத்திற்காக பாலியல் தொழில் செய்து வருகிறார்.

அலிகிரியா என்ற அந்த 26 வயது பெண்மணிக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இவரை போலவே பல பெண்களும் இதே நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement