ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய குஷி.! அதிபர் மாளிகையில் குத்தாட்டம் போட்ட தாலிபான் தீவிரவாதி.! வைரல் வீடியோ

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய குஷி.! அதிபர் மாளிகையில் குத்தாட்டம் போட்ட தாலிபான் தீவிரவாதி.! வைரல் வீடியோ


taliban fighter dance video


ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றிய உற்சாகத்தில், அந்நாட்டு அதிபர் மாளிகையில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலிபான்களுக்கு பயந்து வெளிநாட்டவர்களும், சொந்த நாட்டவர்களுமே நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்பட நாடு முழுவதுமே தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து உள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர்.  

ஆப்கானிஸ்தானில் பெரும்பகுதியை தலிபான்கள் கைப்பற்றிவிட்ட நிலையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் துணை அதிபர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தஜகஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், போர் முடிவுக்கு வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய உற்சாகத்தில் தாலிபான் தீவிரவாதிகளில் ஒருவர் அதிபர் மாளிகையில் நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.