அரசியல் இந்தியா உலகம்

இந்தியாவின் திட்டத்தை காப்பி அடித்த இம்ரான் கான்; அதிர்ச்சியில் இந்திய ஆட்சியாளர்கள்.!

Summary:

suvach bharath - imran khan - pakistan pirathamer

இந்தியாவின் தூய்மை இந்தியா திட்டத்தை கடைபிடிக்கப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த திட்டங்களில் மிகவும் பிரபலமான ஒன்று 
(சுவச் பாரத்) தூய்மை இந்தியா திட்டம். இந்த திட்டமானது இந்தியாவில் பரவலாக கடைபிடிக்கப்பட்டு வெற்றிகரமான திட்டமாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் தற்சமயம் பாகிஸ்தானில் பிரதமராக பதவியேற்றிருக்கும் பாக்கிஸ்தான்   கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் கான் தலைமையிலான அரசு அந்நாட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Image result for imran khan

இந்தியாவின் எதிரி நாடாக விளங்கும் பாகிஸ்தானில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது இந்தியர்களாகிய நமக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு உறவுகளும் வளர்ந்தால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்.

இத்திட்டம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் மாலிக் ஆமின் அஸ்ஸாம் கான் தெரிவிக்கையில், பிரதமர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 


Advertisement