உலகம் லைப் ஸ்டைல்

வீடியோ: நடுக்கடலில் எரிந்து நாசமான சரக்கு கப்பல்!! வைரலாகும் வீடியோ பதிவு..

Summary:

இலங்கை அருகே எண்ணெய் ஏற்றி சென்ற சரக்குக் கப்பல் தீப்பிடித்து எரியும் காட்சி இணையத்தில் வை

இலங்கை அருகே எண்ணெய் ஏற்றி சென்ற சரக்குக் கப்பல் தீப்பிடித்து எரியும் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.


சிங்கப்பூர் நிறுவனத்திற்கு சொந்தமான எம்வி எக்ஸ்பிரஸ் என்ற சரக்கு கப்பல் இந்தியாவில் இருந்து 1,486 கண்டெய்னர்களில் நைட்ரிக் ஆசிட் உள்பட வேதிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு  கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை நாட்டின் எல்லைக்குள் நுழைந்தது.

பின்னர் எம்வி எக்ஸ்பிரஸ் சரக்கு கப்பல் இலங்கை தலைநகர் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைவதற்கான அனுமதிக்காக சரக்கு கப்பல் துறைமுகத்தில் இருந்து 9.5 நாட்டிக்கல் மையில் தொலைவில் நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்தது. 

மேலும் அந்த கப்பலில் இந்தியா, சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 25 மாலுமிகள் பயணம் செய்து உள்ளனர். இந்த நிலையில், வேதிப்பொருட்கள் நிரப்பப்பட்டிருந்த அந்த சரக்கு கப்பலில் உள்ள கண்டெய்னரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டது தெரிந்த இலங்கை கடற்படை கப்பல்கள் தீவிபத்து ஏற்பட்ட  இடத்திற்கு வந்து கப்பலில் பயணம் 25 மாலுமிகளையும் பத்திரமாக மீண்டனர். 

வேதிப்பொருட்களை கொண்டுவந்த கப்பல் என்பதால் தீ வேகவேகமாக பரவியது. இந்திய கடற்படை உதிவியுடன் சுமார் 13 நாட்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் கப்பலில் எரிந்த தீ முழுவதும் அணைக்கப்பட்டது. ஆனால், கப்பல் முழுவதும் எரிந்து நாசமானதால் கப்பலின் பாகங்கள் கடலில் மூழ்கியது.

கப்பலில் 350 டன் எண்ணெய்,மற்றும் ரசாயன பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் மூழ்கியதால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடல் நீர் முழுவதும் எண்ணெய் படலமாகவும் உள்ளது . இதனால், கடலில் வாழும் உயிரினங்களுக்கும், கடல் வளங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


Advertisement