உலகம் லைப் ஸ்டைல்

பாவம் அந்த கர்ப்பிணி!! சாப்பிடும்போது மாஸ்க் போடலன்னு குடும்பத்தோட விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம்..

Summary:

சாப்பிடும்போது மாஸ்க் போடவில்லை என்ற குற்றத்திற்காக கர்ப்பிணி பெண்ணும், அவரது குழந்தை மற்ற

சாப்பிடும்போது மாஸ்க் போடவில்லை என்ற குற்றத்திற்காக கர்ப்பிணி பெண்ணும், அவரது குழந்தை மற்றும் கணவரை விமதில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தனது குழந்தை மற்றும் கணவருடன் ஏறி தனது இருக்கையில் அமர்ந்திருந்தார்.

Couple who were being forced to leave the Spirit Airlines flight

அப்போது அந்த கர்ப்பிணி பெண்ணின் மடியில் இருந்த அவரது குழந்தை மாஸ்க்கை கழட்டிவிட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த விமானப்பணிப்பேன், நீங்கள் முகக்கவச விதிமுறையை மீறிவிட்டிர்கள். எனவே விமானத்தில் இருந்து கீழே இறங்கும்படி கூறியுள்ளார்.

இதனை கேட்டு அந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு முதலில் எதுவும் புரியவில்லை. பின்னர் தனது குழந்தை மாஸ்க்கை கழட்டிவிட்டு சாப்பிட்டுக் கொண்டு இருப்பதை உணர்ந்த அவர், குழந்தை சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறது. சாப்பிட்டு முடித்ததும் மாஸ்க்கை போட்டுவிடுவதாக கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு விமானப்பணிப்பேன் அந்த கர்ப்பிணி பெண்ணிடம் கடுமையாக பேசி கீழே இறங்கும்படி கூறுகிறார். தான் ஒரு கர்ப்பிணி பெண், தன்னால் கீழே இறங்க முடியாது என அந்த பெண் கூறியும் அவர்கள் கேட்பதாக இல்லை. உடனே அருகில் இருந்த சிலரும் அந்த பெண்ணிற்கு ஆதரவாக பேசியும் ஒருகட்டத்தில் அந்த பெண், அவரது கணவர் மற்றும் குழந்தை மூவரையும் விமானத்தில் இருந்து கீழே இறங்கிவிட்டனர்.

இந்த சம்பவமானது உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை விமான நிர்வாகம் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.


Advertisement