இறுதிச்சடங்கிற்காக கொண்டு செல்லப்பட்ட சவப்பெட்டி.! திறந்து பார்த்த போது போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

இறுதிச்சடங்கிற்காக கொண்டு செல்லப்பட்ட சவப்பெட்டி.! திறந்து பார்த்த போது போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!


south-african-cannabis-smugglers-caught-dead-handed-try

இறுதி சடங்கிற்காக சவப்பெட்டியில் இறந்தவரின் உடலை வைத்து கொண்டுசெல்வதாக கூறிய நபர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தபோது சவப்பெட்டி உள்ளே போதை பொருள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தென்னாப்ரிக்காவிலும் கொரோனா காரணமாக கடுமையான சட்டதிட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்னாபிரிக்காவில் கொரோனாவிற்காக அமைக்கப்பட்டிருந்த சோதனை சாவடியில் வந்த கார் ஒன்றை போலீசார் நிறுத்தியுள்ளனர்.

corono

அந்த காரில் மிகவும் புத்திசாலித்தனமாக உடையணிந்திருந்த இரண்டு பேர், தாங்கள் இறுதிச்சடங்கை நடத்தும் இயக்குனர்கள் என்றும்  உடலை த கனம் செய்வதற்காக சவப்பெட்டியில் வைத்து கொண்டு செல்கிறோம் என்று போலீசாரிடம் கூறியுள்ளனர். இவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் சவப்பெட்டியை திறந்து காட்டும் படி கூறிய போது, அவர்கள் மறுத்துள்ளனர்.

இது போலிசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், போலிசார் சவப்பெட்டியை திறந்து பார்த்த போது, உள்ளே 30 பொட்டலங்களில் சுமார் 80 கிலோ கஞ்சா இருந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 35,000 டாலர் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர்களை கைது செய்த போலீசார் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.