உலகம்

பாம்பை செல்லமாக வளர்த்த இளம்பெண்! திடீரென பாம்பு செய்த அதிர்ச்சி சம்பவம்!

Summary:

snake killed young girl


அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் வீட்டில் வளர்த்த 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று பெண்ணை கழுத்தை இறுக்கி கொன்றுள்ளது.

அமெரிக்காவில் இண்டியானா பகுதியைச் சேர்ந்த லாரா ஹர்ஸ்ட் என்ற இளம்பெண் தனது வீட்டில் 140க்கும் மேற்பட்ட பாம்புகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் அவரது வீடு பூட்டப்பட்ட நிலையில் உள்ளே இருந்து துர்நாற்றம் அடிப்பதாக அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அங்கே 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு அவரது கழுத்தினை சுற்றிய நிலையில் உயிருடன் இருந்துள்ளது. எனவே, அந்த பாம்பு கழுத்தை இறுக்கியதில் ஹர்ஸ்ட் உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

லாரா ஹர்ஸ்டின் உயிரிழப்பை சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 


Advertisement