உலகம்

ஓவனில் இருந்துவந்த கருகிய புகை! திறந்து பார்த்த அடுத்தகணமே பிள்ளைகளை தூக்கிக்கொண்டு பதறியடித்து ஓடிய பெண்!

Summary:

snake inside oven at america

அமெரிக்கா, வட கரோலினா பகுதியில் வசித்து வருபவர் அம்பர் ஹெல்மின். இவரது கணவர் ராபர்ட். இவர் சமீபத்தில் பீட்சாவை சூடாக்க தங்களது வீட்டில் உள்ள மைக்ரோ ஓவனை ஆன் செய்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து ஓவன் சூடான பிறகு பீட்சாவை உள்ளே வைக்க சென்றுள்ளார். ஆனால் அவர் பீட்சாவை உள்ளே வைப்பதற்கு முன்பே  காலியான ஓவனிலிருந்து கருகியவாறுபுகை வந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அம்பர் ஹெல்ம் உடனே ஓவனை திறந்து உள்ளே சரிபார்த்துள்ளார்.

அங்கு  பாம்பு ஒன்று கருகி, இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு பதறிப்போன ஹெல்ம் தனது குழந்தைங்களை தூக்கி கொண்டு பாதுகாப்பாக வீட்டைவிட்டு வெளியே ஓடியுள்ளார். பின்னர் பாம்பை ஓவனில் இருந்து அப்புறப்படுத்திய ராபர்ட், வீட்டை முழுமையாக சோதனை செய்துள்ளார். 

மேலும் ஓவனுக்கு அடியில் இருக்கும் ஓட்டை வழியாக பாம்பு உள்ளே நுழைந்து இருக்கலாம் யூகிக்கப்பட்டது.ஆனாலும் வீட்டிற்குள் பாம்பு எப்படி வந்தது என்பது குறித்து அனைவரும் பெரும் சந்தேகத்தில் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் பாம்பு ஏதேனும் உள்ளதா என நிறுவனம் ஒன்றின் மூலம் சோதனையிட திட்டமிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 


Advertisement