கழிவறைக்குள் சென்றதும் கதறிய பெண்! பின்னால் சென்ற கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!



Snake in toilet photos goes viral

பிரித்தானியா நாட்டில் பெண் ஒருவர் கழிவறைக்குள் சென்ற சிறிது நேரத்தில் அலறி அடித்து வெளியே ஓடிவந்துள்ளார். காரணம் அவர் சென்ற கழிவறைக்குள் சுமார் 4 அடி நீளம் உள்ள பாம்பு ஓன்று இருந்துள்ளது. தனது மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் அங்கு ஓடி வர கழிவறையில் இருந்த பாம்பை பார்த்ததும் அவரும் அஞ்சி நடுங்கியுள்ளார்.

உடனே விலங்குகள் பிடிக்கும் அமைப்பினருக்கு தகவல் கொடுக்க அன்று பார்த்தும் அனைவரும் விடுமுறையில் இருந்துள்ளனர். இதனால் வேறுவழி இல்லாமல் கழிவறை கதவை சாத்திவிட்டு ஒரு இரவு முழுக்க கணவன் மனைவி பயத்திலையே வீட்டில் இருந்துள்ளனர்.

snake

அடுத்த நாள் அந்த நபரின் நண்பர் ஒருவருக்கு போன் செய்து நடந்ததை கூற அவர் அங்கு வந்து ஷூ லேஸினால் கட்டி அந்த பாம்பை கழிவறையில் இருந்து வெளியே எடுத்துள்ளார். பாம்பை அங்கிருந்து அப்புறப்படுத்தியும் அந்த கழிவறைக்குள் செல்வதற்கு பயமாக இருப்பதாக அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.