அட.. ஆச்சர்யம் ஆனால் உண்மை! முட்டையிடாமல், குட்டி போடும் பாம்பு! தீயாய் பரவும் அரிய வீடியோ!

அட.. ஆச்சர்யம் ஆனால் உண்மை! முட்டையிடாமல், குட்டி போடும் பாம்பு! தீயாய் பரவும் அரிய வீடியோ!


snake-giving-birth-to-baby-snake-video-viral

பொதுவாகவே பாம்புகள் என்றால் படையும் அஞ்சும் என்பர். எவ்வளவு பெரிய வீரர்களாக இருந்தாலும் பாம்புகளை கண்டால் பதட்டம், நடுக்கம் கொள்ளாதவர்கள் கிடையாது. இந்நிலையில் அண்மைகாலமாக சமூக வலைதளங்களில் பாம்புகள் குறித்த ஏராளமான வீடியோக்கள் பெருமளவில் வைரலாகி வருகிறது. 

இந்த நிலையில் தற்போது பாம்பு ஒன்று குட்டி போடும் அரிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பெரும்பாலும் பாம்புகள் முட்டையிட்டு, பின்னர் சிறிது நேரம் கழித்தே அதிலிருந்து பாம்புக்குட்டிகள் வெளியே வரும். ஆனால் பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் பச்சை நிற பாம்பு ஒன்று பழுப்பு நிறத்தில் குட்டி பாம்பு ஒன்றை பெற்றெடுத்துள்ளது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அதாவது பெரிய பாம்பு ஒன்று மரக்கிளைகளில் சுற்றி இருக்க, அதன் வயிற்றுப் பகுதியில் இருந்து தானே குட்டி பாம்பு ஒன்று பிறந்து வெளியே வருகிறது. இந்நிலையில் இந்த வகை பாம்பு அமெரிக்காவில் அதிக மழை பெய்யும், உயரமான மரங்களில் காணப்படும் எமரால்டு ட்ரீ போவா பாம்பு எனவும், இவை முட்டையிடாது, நேரடியாக குட்டிதான் போடும் எனவும்  இந்த வீடியோவை வெளியிட்டுள்ள சயின்ஸ் கேர்ள் என்பவர் தெரிவித்துள்ளார்.