கொஞ்சம் விட்ருந்தா உயிரே போயிருக்கும்.. கடவுள்போல் வந்து காப்பாற்றிய பயிற்சியாளர்.. சிலிர்க்க வைக்கும் வீடியோ!
அந்தரத்தில் பரந்த ஸ்கை டைவிங் வீரர் ஒருவர் பாராசூட்டை திறக்க முடியாமல் தவித்த வீடியோ காட்சி வைரலாகிவருகிறது.
வெளிநாடுகளில் ஸ்கை டைவிங் செய்வது மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று. பொதுவாக ஸ்கை டைவிங்கில் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த சாகச விளையாட்டுகளில் விளையாட முடியும். அல்லது நன்கு பயிற்சி பெற்ற ஒரு பயிற்சியாளரின் உதவியுடன் யார் வேண்டுமானாலும் ஸ்கை டைவிங் செய்யமுடியும்.
இந்நிலையில் ஈரானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஸ்கை டைவிங் செய்வதற்காக உயரமான இடத்தில் இருந்து கீழே குதிக்கிறார். கீழே குதித்த சிறிது நேரத்தில் அவர் காற்றின் திசையில் சுழற்றப்பட்டு உயிருக்கு போராடுகிறார். மேலும் அவரால் பாராசூட்டை திறக்கமுடியவில்லை. இதனால் அவரது கதி என்ன ஆகுமோ என பரபரப்பு தொற்றிக்கொண்ட நிலையில், கடவுள் போல் வந்து அந்த இளைஞரை காப்பாற்றியுள்ளார் ஸ்கை டைவிங் பயிற்சியாளர் ஒருவர்.
அந்த இளைஞருக்கு அருகே பறந்துகொண்டிருந்த இவர், உடனே அந்த இளைஞரின் பாராசூட்டை திறந்து அவரை காப்பற்றுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.