உலகம்

10 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த ஒரு பெண் குழந்தை..! 6 மாத சிறுமிக்கு தாயின் மார்பிலிருந்து பால் கொடுக்க முடியாத சூழல்.! உடம்பெல்லாம் குத்தப்பட்ட கம்பி..! கடவுளே..!

Summary:

Six-month old miracle baby with heart condition beats coronavirus

உலகம் முழுவதும் பல்வேறு இழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட வருகிறது. இந்நிலையியல், கொரோனாவில் இருந்து மீண்ட ஒரு குழந்தையின் புகைப்படம் பார்ப்போரை கண்கலங்க வைக்கின்றது.

அமெரிக்காவை சேர்ந்த 6 மாத பெண் குழந்தை ஓன்று பிறந்த உடனே இதயத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் அந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் லிவர் பூலில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தையின் உடல்நிலை மிக மோசமாக இருந்த நிலையில், அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுள்ளது. குழந்தையுடன் அவரது அம்மா அருகியிலையே இருக்க அனுமதிக்கப்பட்டார். குழந்தையின் தந்தை வீட்டிலையே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

கொரோனா தாக்கத்தால் ஒவ்வொரு நாளும் உயிர்க்கு போராடிய அந்த 6 மாத குழந்தை கொரோனா தாக்கத்தால் தாய் பால் கூட குடிக்க முடியாத நிலையில், உடம்பெல்லாம் கம்பிகளால் குத்தப்பட்டு, இயந்திரங்கள் மாட்டப்பட்ட நிலையில் வெளியான அந்த புகைப்படம் பார்ப்போரை கண்கலங்க வைத்தது. ஒருவழியாக அந்த குழந்தை கொரோனாவின் பிடியில் இருந்து போராடி மீண்டு வந்துள்ளது.

தற்போது அந்த குழந்தை நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், திருமணம் முடிந்து 10 வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்த தம்பதி 10 வருடங்களுக்கு பிறகு இந்த குழந்தையை பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement