சிங்கப்பூரில் கொரோனாவால் பாதித்த வெளிநாட்டவர்கள்! சிங்கப்பூர் அதிபர் வெளியீட்ட நிகழ்ச்சி பேச்சு!.

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதித்த வெளிநாட்டவர்கள்! சிங்கப்பூர் அதிபர் வெளியீட்ட நிகழ்ச்சி பேச்சு!.


Singapore pm talk about corona

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஆக அதிகமாக 287 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் என சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் பேசுகையில், சிங்கப்பூரில், உங்களது மகன்கள், தந்தைகள், கணவர்கள் ஆகியோரின் உழைப்பையும் பங்களிப்பையும் நாங்கள் போற்றுகிறோம். அவர்களது நலனில், எங்களுக்குப் பொறுப்பு உள்ளதை, நாங்கள் உணர்கிறோம். நாங்கள், எங்களால் இயன்ற அனைத்தையும் செய்து, அவர்களது சுகாதாரம், வாழ்வாதாரம், நலன் ஆகியவற்றை இங்குக் கவனித்துக்கொள்வோம் என தெரிவித்தார்.

corona

மேலும், எங்கள் நாட்டில் இருக்கும் உங்களது உறவினர்களை உங்களிடம் பத்திரமாகத் திரும்பி வரச் செய்வோம். அனைத்து சிங்கப்பூரர்களின் சார்பாக, நீங்கள் நலமுடன் இருக்க நான் வேண்டுகிறேன் என்று காணொளியில் தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாட்டு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் தமது காணொளியைப் பார்த்தால் அவர்களிடம் கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.