கேட்கவே பாவமா இருக்கு!! உக்ரைன் சண்டையில் ரஷ்ய ராணுவத்தினர் இத்தனை ஆயிரம் பேர் பலியா??



russia-vs-ukraine-war-latest-updates

உக்ரைன் மற்றும் ரஷ்ய இடையே நடந்துவரும் சண்டையில் இதுவரை 14 ஆயிரத்து 700 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் தங்களை சேர்த்துக்கொள்ளும்படி உக்ரைன் நாடு கேட்டதை அடுத்து ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சண்டை முற்றி தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் நடந்துவருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 3 வது வாரத்தை எட்டியுள்ளது.

russia

மேலும், உக்ரைனின் பல்வேறு இடங்களில் ரஷ்யா பயங்கர தாக்குதலை நடத்திவருகிறது. இந்நிலையில் ரஷ்ய ராணுவத்திற்கு பெரிய பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 96 விமானங்கள், 21 ஆளில்லா விமானங்கள், 118 ஹெலிகாப்டர்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் 476 பீரங்கிகளைத் தகர்த்துள்ளதாகவும், 3 கப்பல்கள், 44 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு, ஆயுதந்தாங்கிய வாகனங்கள் ஆகியவற்றைத் தாக்கி அழித்துள்ளதாகவும், 14 ஆயிரத்து 700 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.