ரஷ்ய பகுதிகள் வழியே இந்திய மாணவர்கள் மீட்பு - இந்தியாவுக்கான ரஷிய தூதர் அறிவிப்பு.!Russia Ambassador to India Announce Indians Evacuate Using Russian Territory

உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து சென்றுள்ள ரஷியா பல்முனை தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், உக்ரைனின் மேற்கு பக்கம் உள்ள போலந்து மற்றும் பிற அண்டை நாடுகளின் எல்லை வழியே அவர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகிறார்கள். 

கார்க்கிவ் நகரில் நடைபெற்ற ரஷியாவின் வான்வழி தாக்குதலில், கர்நாடக மாநிலம் ஹாவேரி நகரை சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற மருத்துவக்கல்லூரி மாணவர் உயிரிழந்தார். இதனால் அங்கு சிக்கியுள்ள பியா இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பெறும் அச்சத்திற்கு உள்ளாகிய நிலையில், மத்திய அரசின் அமைச்சர்கள் தலைமையிலான மீட்புக்கு உக்ரைன் சென்றுள்ளது. 

russia

இந்த நிலையில், இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலீபோவ் செய்தியர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "கார்க்கிவ் மற்றும் கிழக்கு உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்காக, இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். ரஷிய நாட்டின் வழியே இந்தியர்களை வெளியேற்ற இந்திய அரசு வைத்துள்ள கோரிக்கையை ரஷியா ஏற்றுக்கொண்டுள்ளது.

ஐ.நா சபையில் இந்திய தனது சமநிலை செயல்பாட்டை வெளிப்படுத்தியமைக்கு மிகுந்த நன்றி. நாங்கள் என்றும் இந்தியர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம். நெருக்கடியான நிலையை இந்தியாவும் புரிந்துகொண்டு எங்களுக்காக செயலாற்றியுள்ளது. S 400 ரக ஏவுகணை வழங்குதலில் எந்த தடையும் இருக்காது. பிற நாடுகள் ரஷியா இந்தியாவுக்கு வழங்கும் S 400 ரக ஏவுகணை விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது" என்று தெரிவித்தார்.