11 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் சிரிக்க கூடாது.! வடகொரியா அதிபர் உத்தரவு.!! என்ன காரணம் தெரியுமா.?

11 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் சிரிக்க கூடாது.! வடகொரியா அதிபர் உத்தரவு.!! என்ன காரணம் தெரியுமா.?


public don't laugh 11 days in North korea

வட கொரியா நாட்டு மக்கள் அனைவரும் 11 நாட்களுக்கு சிரிக்க கூடாது என அந்நாட்டு அதிபர் தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வடகொரியா நாட்டை அதிபர் கிம் ஜோங் உன் ஆட்சி செய்து வருகிறார். தற்போது வரையில் 3-வது தலைமுறையாக இவரது குடும்பமே ஆட்சி செய்து வருகிறது. வடகொரியாவின்  தற்போதைய அதிபர்  கிம் ஜோங் உன் அவர்களின் தந்தை கிம் ஜோங் இல் கடந்த 2011 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். இந்தநிலையில் வட கொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜான் இல் அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் தற்போதைய அதிபர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொதுமக்கள் அனைவரும் அளவோடு சாப்பிட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் வட கொரிய அதிபர் திடீரென ஒரு புது உத்தரவு ஒன்றை பிறப்பித்து அந்த நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

அதாவது தற்போதைய அதிபர்  கிம் ஜோங் உன் அவர்களின் தந்தை கிம் ஜோங் இல் அவர்களின்  நினைவு தினத்தை ஒட்டி வடகொரிய நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது, பிறந்தநாள் விழாக்களை கொண்டாடக்கூடாது என புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.