உலகம்

300க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த மருத்துவர்!. விசாரணையில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

Summary:

Psychiatrist raped 300 girls


பிரேசில் நாட்டில் கடவுளின் தூதர் என்று பல்வேறு தரப்பினரால் அழைக்கப்பட்டு வந்தவர் ஜவாகோ  டி பரியா. இவர் மதபோதகராகவும், மனநல மருத்துவராகவும் பணியாற்றி வந்துள்ளார். 

பொதுமக்களுக்கு ஏற்படும் மனநல நோய்களுக்கு ஆன்மீக முறையில் சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த வாரம் டச்சு புகைப்பட கலைஞர் ஸாஹிரா லீனெகே மாவுஸ், தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார்.

அதில், டி பரியா தனது உணர்ச்சிகளைத் தூண்டி, பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து  9 பெண்கள் தொலைக்காட்சியிடம், தாங்களும் டி பரியாவால் பலாத்காரம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

raped க்கான பட முடிவு

இதனையடுத்து, இது தொடர்பான செய்திகள் வைரலாகி வந்தது.  ஆரம்பத்தில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த டி பரியா, பின்னர் 300க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்ததாக டி பரியா மீது பபோலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் கூறுகையில், தன் மீது 30க்கும் மேற்பட்ட ஆவிகள் புகுந்து விட்டதாகவும், அதனால் தான் பெண்களை பலாத்காரம் செய்ததாகவும் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


Advertisement