பாகிஸ்தானின் வழக்கறிஞர் சங்கத் தலைவர்... ஐகோர்ட் வளாகத்தில் சுட்டுக்கொலை...!!

பாகிஸ்தானின் வழக்கறிஞர் சங்கத் தலைவர்... ஐகோர்ட் வளாகத்தில் சுட்டுக்கொலை...!!


President of Pakistan Bar Association... Shot dead in ICourt premises...

பாகிஸ்தான் வழக்கறிஞர் அப்துல் லத்தீப் அப்ரிடி பெஷாவர உயர் நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அரசியல்வாதியும், மூத்த வழக்கறிஞருமான அப்துல் லத்தீப் அப்ரிடி பெஷாவரில் உயர் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் ஆறு முறை சுடப்பட்டார். அவரை உடனடியாக பெஷாவரில் இருக்கும் லேடி ரீடிங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

பாகிஸ்தான் ராணுவத்தை அப்துல் லத்தீப் அப்ரிடி கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். மக்களின் உரிமைகளுக்காக, சிவில் உரிமைகள், ஜனநாயகம், குறிப்பாக மத்திய அரசின் ஆதிக்கத்தில் இருக்கும் பழங்குடியினப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்காக போராடியவர்.

1943 இல் பிறந்த அவர், 1968 இல் பெஷாவர் பல்கலைக்கழகத்தில் தனது எல்.எல்.பி பட்டம் பெற்றார். வழக்கறிஞராக 50 ஆண்டுகலுக்கு மேல் பணியாற்றி உள்ளார். 2020 இல் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார். மேலும் பாகிஸ்தான் பார் கவுன்சிலின் துணைத் தலைவராகவும் இருந்தார்.