உலகம் வீடியோ

நான் இறந்துவிட்டால்.. தனக்கு பிறக்கவிருக்கும் குழந்தைக்கு மிக உருக்கமான வீடியோவை வெளியிட்ட கர்ப்பிணி மருத்துவர்!

Summary:

pregnant doctors post video for unborn baby

இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் மீனல் விஸ். இவர் பிரித்தானியாவில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவரது கணவர் நிஷாந்த் ஜோஷியும் மருத்துவர் ஆவார். இவர்கள் நாடு முழுவதும் பணியாற்றும் என்.எச். எஸ் ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பு உடைகள் இல்லை என சுகாதாரத்துறை மற்றும் இங்கிலாந்து பொது சுகாதார அமைப்புக்கு எதிராக புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் விஷ் தனக்கு பிறக்கவிருக்கும் குழந்தைக்கு வீடியோ ஒன்றை தயார் செய்து வைத்துள்ளார். அதில் அன்புள்ள ராதிகா இன்னும் 63 நாட்களில் இது உன்னுடைய குடியிருப்பாக மாறிவிடும். எனக்கு பிடித்த இடங்கள், நபர்கள் அனைவரையும் நான் உனக்கு அறிமுகம் செய்வேன். நீ மிகவும் இக்கட்டான சூழலில் பிறக்கவிருக்கிறாய்.

 உலகமே ஒரு போரை சந்தித்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் லச்சக்கணக்கான மக்கள் இறக்கிறார்கள். இந்த போரின் போர் வீரர்கள் உனது தந்தை மற்றும் என்னைப் போன்ற சாதாரண மக்கள்தான். இந்த கடினமான சூழலில் நான் இறக்க நேரிட்டால் இந்த வீடியோவை உனக்காக பதிவு செய்கிறேன் என மருத்துவர் விஷ் கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோ இணைப்பில் நமது என்.எச். எஸ் ஊழியர்கள் உரிய பாதுகாப்பின்றி உயிரிழக்கின்றனர். அவர்களுக்கு அரசு உரிய உதவி செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.


Advertisement