உலகம் லைப் ஸ்டைல்

மகளுக்காக வாங்கிய பொம்மை! பொம்மைக்குள் இருந்த மர்மம்! வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

Pothai porul found in doll at amerika

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த எலிசபெத் என்ற பெண் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது மகளுக்கு பரிசளிப்பதற்காக கைகளால் உருவாக்கப்பட்ட பொம்மை ஒன்றை சுமார் 500 டாலர் கொடுத்து வாங்கியுள்ளார்.

ஏதோ நினைப்பில் பொம்மையை வாங்கி வந்த எலிசபெத் அந்த பொம்மையின் தோற்றத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக உணர்ந்துள்ளார். மேலும், தனது மகளுக்கு அந்த பொம்மை பிடிக்கவில்லை என்பதால் அந்த பொம்மையின் தோற்றத்தை மாற்ற முயற்சி செய்துள்ளார்.

என்ன செய்தும் அவரது மகளுக்கு அந்த பொம்மையை பிடிக்கவில்லை. உடனே, அருகில் இருக்கும் பொம்மை கடை ஒன்றில் கொடுத்து அந்த பொம்மையை சரி செய்துதருமாறு கேட்டுள்ளார் எலிசபத். பொம்மமையை வாங்கிய கடைக்காரருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த பொம்மை முழுவதும் போதை பொருள் நிரப்பப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க, அவர்கள் எலிசபெத்தை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் எலிசபத் கூறியதை கேட்டு போலீசார் அவரை விடுதலை செய்துள்ளன்னர். மேலும், அவர் பொம்மை வாங்கியதாக கூறும் பகுதி போதை மருந்து கடத்தலுக்கு பெயர் போன பகுதி என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Advertisement