உலகம் லைப் ஸ்டைல்

கண்களின் வெள்ளை பகுதிக்கு டை அடித்த இளம் பெண்..! விபரீத ஆசையால் அடுத்தடுத்து நடந்த சோகம்.!

Summary:

Polish woman 25 goes BLIND after getting her eyeballs dyed black

கண்களுக்கு டை அடிக்க ஆசைப்பட்டு இளம் பெண் ஒரு கண் பார்வையை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலந்து நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா என்ற 25 வயது இளம் பெண் ஒருவர் பிரபல ராப் கலைஞர் ஒருவரின் தீவிர ரசிகை என கூறப்படுகிறது.

அந்த ராப் கலைஞர் மீது தீவிர பற்றுக்கொண்ட அலெக்சாண்ட்ரா அவரைப்போலவே தனது கண்களில் உள்ள வெள்ளை பகுதிக்கு டை அடிக்க ஆசைப்பட்டுள்ளார். இதனால் பச்சை குத்தும் நபர் ஒருவரை அணுகி, தன்னுடைய கண்களுக்கு டை அடித்துள்ளார். டை அடிக்கும்போதே தனது கண்களில் வலி ஏற்படுவதாக அலெக்சாண்ட்ரா கூறியுள்ளார்.

இது சாதரண வலிதான் என்றும், சில நாட்களுக்கு வலி நிவாரணி சாப்பிட்டால் சரியாகிவிடும் எனவும் கூறி தொடர்ந்து டை அடித்துள்ளார் அந்த நபர். இந்நிலையில், டை அடித்த சில நாட்களில் அலெக்சாண்ட்ராவின் ஒரு கண்ணில் பார்வை பறிபோயுள்ளது. அலெக்சாண்ட்ராவை சோதித்த மருத்துவர்கள், அவரது மற்றொரு கண்ணும் பார்வையை இழந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து அலெக்சாண்ட்ராவிற்கு பச்சை குத்தியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement