
புகார் கொடுக்க வந்த பெண்ணை பாடி மசாஜ் செய்யவைத்த போலீஸ் அதிகாரி...! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ இதோ....
புகார் கொடுக்க வந்த பெண்ணை போலீஸ் அதிகாரி பாடி மசாஜ் செய்ய வைத்த செயல் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குறிப்பிட்ட வீடியோவில், பீகார் மாநிலம் சகர்ஷா மாவட்டம் நுகாட்டா போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த உயர் அதிகாரியான சசிபூஷன் சின்ஹா என்பவர், பெண் ஒருவர் தன் மகனை பெயிலில் எடுக்க போலீசாரிடம் உதவி கேட்டு வந்துள்ளார். அந்த போலீஸ் அதிகாரி அந்த பெண்ணை தனக்கு மசாஜ் செய்ய சொல்லிவிட்டு இவர் அந்த பெண்ணின் வழக்கு குறித்து யாருடனோ போனில் பேசிக்கொண்டிருக்கிறார்.
அந்த போனில் அவர் பேசுகையில் "இவர் ஏழை பெண், எவ்வளவு பணம் நான் கொடுக்க முடியும்? நான் பணத்தை ஒரு கவரில் போட்டு 2 பெண்களை ஆதார் கார்டுடன் அனுப்பி வைக்கிறேன் என்று கூறுகிறார். மேலும் எப்பொழுது அனுப்பி வைக்க வேண்டும் என சொல்லுங்கள்" என கேட்க போனில் பேசுபவர்கள் திங்கட்கிழமை அனுப்பி வையுங்கள் என்று கூறுகின்றனர். அதற்கு இந்த போலீஸ் அதிகாரியும் திங்கட்கிழமை அவர்களிடம் முகவரியையும் செல்போன் நம்பரையும் கொடுத்து அனுப்பி வைக்கிறேன். இதற்காக நான் ரூ10,000 என் சொந்த பணத்தை கொடுத்துவிடுகிறேன்" என கூறினார். இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த ஒரு கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ये बिहार पुलिस है, जो फरियादी महिलाओं से थाने में तेल की मालिश कराती है.
— Utkarsh Singh (@UtkarshSingh_) April 28, 2022
वीडियो में सहरसा जिले के डरहार ओपी के दारोगा शशिभूषण सिन्हा बताए जा रहे हैं, वीडियो वायरल. pic.twitter.com/BAyW68Vw8R
Advertisement
Advertisement