போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டை.! மூச்சு விட்ட டெடிபியர்... வசமாக சிக்கிய கார் திருடன்.!
பிரிட்டனில் 18 வயது நிரம்பிய ஜோசுவா டோப்சன் என்ற இளைஞர் கடந்த மே மாதம் ஒரு காரைத் திருடி, அதே நாளில் எரிபொருளுக்கு பணம் கொடுக்காமல் காரில் தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கிரேட்டர் மான்செஸ்டர் போலீசார் கடந்த மே மாதத்திலிருந்து கார் திருடன் ஜோசுவாவை தேடிவந்தனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் அவருடைய முகவரியைக் கண்டறிந்து அவரது வீட்டிற்கு போலீசார் சென்றபோது ஜோசுவாவை அங்கு காணவில்லை. ஆனால் வீட்டில் கிடந்த ஒரு 5 அடி நீளமுள்ள உயிரற்ற டெடி பியர் மூச்சுவிடுவதை கவனித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த டெடியை அசைத்து பார்த்துள்ளனர்.
பஞ்சால் அடைக்கப்பட்டிருக்கும் டெடியை பரிசோதித்ததில் உள்ளே ஜோசுவா உடலை சுருட்டி அமர்ந்திருந்ததை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து க்ரேட்டர் மான்செஸ்டர் போலீசார் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ''நாங்கள் அவரை கைதுசெய்ய அங்கு சென்றோம். எங்கள் அதிகாரிகள் ஒரு பெரிய டெடி பியர் மூச்சுவிடுவதை கண்டு சந்தேகித்து அதனை பரிசோதித்தபோது உள்ளே டோப்சன் மறைந்திருந்தார் என பதிவிட்டுள்ளனர்.