கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
சிலையுடன் செல்பி எடுக்க சென்ற நபருக்கு ஒரு நொடியில் காத்திருந்த அதிர்ச்சி..!! வைரலாகும் வீடியோ..

சிலையென நினைத்து உண்மையான முதலையின் வாயில் சிக்கி தப்பித்த நபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
குறிப்பிட்ட சம்பவமானது பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்துள்ளது. Nehemias Chipada என்ற நபர் தனது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தனது நண்பர்களுடன் பூங்கா ஒன்றுக்கு சென்றுள்ளார். பூங்காவில் இருந்த சிலைகளுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்த அவர், அருகில் இருந்த குளம் ஒன்றில் முதலை சிலை இருப்பதை பார்த்துள்ளார்.
உடனே குளத்திற்குள் இறங்கி முதலை சிலையுடன் செல்பி எடுக்க முயன்ற அவருக்கு அப்போதுதான் தெரிந்தது அது சிலை இல்லை, உண்மையான முதலை என்று. முதலை அவரை கவ்வி இழுத்து செல்ல முற்பட்டபோது, அந்த நபர் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இந்த வீடியோ காட்சியான தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது.