மனிதனிடம் இருந்து பூனைக்கு பரவிய கொரோனா வைரஸ்.! ஹாங்காங்கில் பூனைக்கு கொரோனா வைரஸ் உறுதி.!

மனிதனிடம் இருந்து பூனைக்கு பரவிய கொரோனா வைரஸ்.! ஹாங்காங்கில் பூனைக்கு கொரோனா வைரஸ் உறுதி.!


Pet cat tests positive for coronavirus in Hong Kong

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இதுவரை 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹாங்காங் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பவரிடம் இருந்து அவரின் பூனைக்கும் கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பூனையிடம் நோய்க்கான எந்த அறிகுறிகளும் இல்லை எனவும், செல்லப்பிராணிகள் மூலம் கொரோனா மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பில்லை என்பதால் அவற்றின் உரிமையாளர்கள் விலங்குகளை கைவிட்டுவிட கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

corono

ஏற்கனவே ஹாங்காங் நாட்டில் இரண்டு நாய்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளநிலையில் தற்போது ஒரு பூனைக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.