உலகம்

பிரசவத்துக்கு இனி தந்தைக்கும் சம்பளத்துடன் 164 நாட்கள் விடுமுறை!

Summary:

paternity leave for men

ஐரோப்பிய நாடான பின்லாந்தின் பிரதமராக 34 வயதான சன்னா மரீன் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி பதவி ஏற்றார். உலகின் இளம் வயது பிரதமரான இவர், பின்லாந்தின் 3வது பெண் பிரதமர் ஆவார். 

சில வாரங்களுக்கு முன்பு உலக பொருளாதார கூட்டமைப்பில் பேசிய சன்னா மரின், பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில், தங்கள் நாட்டில் பேறுகால விடுப்பு கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்போவதாக அறிவித்தார்.

இந்நிலையில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில், புதிய பிரசவ கால விடுமுறை கொள்கையை சன்னா மரின் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரசவத்திற்கு பின் உள்ள பொறுப்புகளை ஆண்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், குழந்தை பேறுக்கு பிறகு, தந்தைக்கும் 164 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என பின்லாந்து அரசு அறிவித்துள்ளது.

குழந்தை வளர்ப்பில் தாய் மற்றும் தந்தைக்கு சமமான பொறுப்பு இருப்பதை உணர்த்தும் வகையில் ஆண்களுக்கான விடுப்பு  நாட்களை அதிகரித்துள்ளதாக பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது.


Advertisement