தக்காளியை தங்கம் போல் அணிந்திருந்த புதுமணப்பெண்! காரணம் என்ன தெரியுமா - வைரலாகும் புகைப்படம்.

தக்காளியை தங்கம் போல் அணிந்திருந்த புதுமணப்பெண்! காரணம் என்ன தெரியுமா - வைரலாகும் புகைப்படம்.


Pakisthan tomatoes

பாகிஸ்தானில் தக்காளியின் விலை தங்கத்தின் விலை போன்று அதிகரித்துள்ளது. அதாவது ஒரு கிலோ தக்காளியின் விலை ரூபாய் 400 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மக்கள் தக்காளி வாங்க முடியாமல் மிகவும் அவதியுறுகின்றனர்.

இதனால் பாகிஸ்தான் அரசை கண்டிக்கும் வகையிலும், உலக மக்களை கவரும் வகையிலும் பாகிஸ்தானில் நடைப்பெற்ற திருமணத்தில் புதுமண பெண்ணுக்கு கை, கால், கழுத்து, தலை என அனைத்து பகுதியிலும் தங்கத்திற்கு பதிலாக தக்காளியை அணிகலன்களாக அணிந்துள்ளார்.

Tomatoes

மேலும் அப்பெண்ணுக்கு வரதட்சனையாக 3 கூடை தக்காளி சீதனமாக வழங்கப்பட்டுள்ளது. இச்செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்நிகழ்வு குறித்து மணபெண்ணிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் பேட்டி கேட்டுள்ளார்.

அதற்கு அந்த மணபெண் தற்போது தங்கத்தின் விலை போன்று தக்காளியின் விலையும் உயர்ந்துள்ளதால் தங்கத்திற்கு பதில் தக்காளியை அணிந்துள்ளதாக கூறியுள்ளார்.