மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றினால் பெண்கள் ஆணவக்கொலை.. பாகிஸ்தானில் பரபரப்பு சம்பவம்.!

மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றினால் பெண்கள் ஆணவக்கொலை.. பாகிஸ்தானில் பரபரப்பு சம்பவம்.!



pakisthan-girl-killed-by-his-brother

மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றும் பெண்கள், குடும்ப உறுப்பினர்களால் ஆணவக்கொலை செய்யப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 2016ஆம் ஆண்டு கந்தீல் பலூச் என்ற நடிகை அவரது சகோதரரால் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாகிஸ்தான் பஞ்சப் மாகாணம், ஒகாரா மாவட்டத்தில் வசித்து வருபவர் சித்ரா (வயது 21). இவர் நடன கலைஞராகவும், மாடல் அழகியாகவும் சிறப்பாக பங்காற்றி வந்துள்ளார். இந்த நிலையில், சித்ராவின் குடும்பத்தினர் அவர் இந்தத் துறையில் இருப்பதை விரும்பாததால், அவர் மீது வெறுப்பு கொண்டு சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளனர்.

Pakisthan

மேலும், குடும்ப பாரம்பரியத்திற்கு எதிரான இந்த துறையை விட்டு வெளியேற வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் நமக்கு சரிப்பட்டு வராது என்று தொடர்ந்து குடும்பத்தினர் வற்புறுத்தி வந்துள்ளனர். 

ஆனால், அதைச் சித்ரா ஏற்க மறுத்ததால், சித்ராவின் உறவினர் ஒருவர் பொது இடத்தில் அவர் மேற்கத்திய உடை அணிந்து நடனமாடும் வீடியோவை அவரது சகோதரர் ஹம்சாவுக்கு போனில் அனுப்பி வைத்துள்ளார்.

இதனைக் கண்டு மிகவும் ஆவேசமடைந்த ஹம்சா நடனம் மற்றும் மாடலிங் துறையை உடனடியாக நீ விட்டுவிட வேண்டும் என சித்ராவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

Pakisthan

ஆனால், இதற்கு சித்ரா மறுப்பு தெரிவித்த நிலையில், அவரை சரமாரியாக தாக்கி, உடன் பிறந்த சகோதரி எனவும் பாராமல் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். பின் இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர், ஹம்சாவை கைது செய்து ஆணவக்கொலை செய்ததற்காக விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

அத்துடன் மேற்கத்திய உடையணிந்து அவர்களைப் போல இருப்பதை அறவே வெறுக்கும் பாகிஸ்தான் வாசிகள், தனது குடும்பத்தில் உள்ள குடும்ப நபர்கள் என்றும் பாராமல் ஆணவக்கொலை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.