உலகம்

பாகிஸ்தான் பயணிகள் விமானம் நொறுங்கி விழும் வீடியோ காட்சிகள் வெளியீடு..! பதறவைக்கும் வீடியோ இதோ..!

Summary:

Pakistan flight crash cctv video

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி விமானம் நிலையம் அருகே தரையிறங்க முயன்ற பயணிகள் விமானம் குடியிருப்பு பகுதியில் நெருங்கி விழும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் இருந்து கராச்சிக்கு 99 பயணிகள், 8 விமான பணியாளர்கள், விமானிகளுடன் புறப்பட பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் ரக பயணிகள் விமானம் நேற்று மாலை கராச்சி நகரில் தரையிறங்கு முயற்சியில் அங்கிருந்த குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் 97 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழும் காட்சிகள் அந்த பகுதியில் இருந்த கேமிராக்களில் பாதிவாகி உள்ள நிலையில் தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த காட்சி.


Advertisement