போலி ஆதார்அட்டை! உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள்! வசமாக சிக்கிய நிலையில் பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

போலி ஆதார்அட்டை! உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள்! வசமாக சிக்கிய நிலையில் பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!


pakistan-embassy-official-out-from-country-for-spying

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்தவர்கள் அமீத் ஹுசைன் மற்றும் தாஹிர்ஹான்.  இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த டெல்லி சிறப்பு படை போலீசார் இருவரையும் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் சமீபத்தில் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களை இந்தியர் ஒருவரிடமிருந்து பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் காவலர்களிடம் பிடிபட்டுள்ளனர். பின்னர் விசாரணையில் அவர்கள் தாங்கள் இந்தியர்கள் என  போலியான ஆதார் அட்டையையும் காட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து தீவிர விசாரணையின் போது தாங்கள் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் எனவும், பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ க்கு பணியாற்றுவதாகவும் ஒப்புகொண்டுள்ளனர். 

Spying

 இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் 24 மணி நேரத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான தகவலை பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் அனுப்பியுள்ளது. இந்திய பாதுகாப்பிற்கு எதிரான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஈடுபட்டதால் அந்நாட்டிடம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.