காரை ஸ்டார்ட் பண்ணு உடனே ஏதோ ஒரு வித்தியாசமான சத்தம்!! எஞ்சின் பெட்டியை திறந்து பார்த்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி..

காரை ஸ்டார்ட் பண்ணு உடனே ஏதோ ஒரு வித்தியாசமான சத்தம்!! எஞ்சின் பெட்டியை திறந்து பார்த்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி..


Otter found inside car viral news

கார் எஞ்சின் பெட்டிக்குள் நீர் நாய் ஒன்று இருந்த சம்பவம் உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது.

ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது காரை எடின்பார்க் என்ற ஏரிக்கு அருகில் பார்க் செய்த்துவிட்டு தனது வேலைகளை கவனித்துள்ளார். சிறிது நேரம் கழித்து தனது காரை எடுக்க வந்த அந்த பெண், காரை ஸ்டார்ட் செய்தபோது ஏதோ விசித்திரமான சத்தம் வருவதை உணர்ந்துள்ளார்.

மீண்டும் காரை ஸ்டார்ட் செய்தபோது அதே சத்தம் மீண்டும் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அந்த பெண், காரின் எஞ்சின் இருக்கும் பெட்டியை திறந்துபார்த்தபோது அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், நீர் நாய் ஒன்று அந்த காரின் எஞ்சின் இருக்கும் பகுதியில் பதுங்கி இருந்துள்ளது.

இதுகுறித்து அந்த பெண் வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, அங்கு வந்த அதிகாரிகள் காரில் இருந்து அந்த நீர் நாயை பத்திரமாக மீட்டுள்ளனர். காரின் எஞ்சின் கதவு மூடி இருந்தும், அந்த நீர் நாய் எப்படி அதனுள் சென்றது என தெரியவில்லை என அந்த பெண் கூறியுள்ளார். இந்த சம்பவம் தற்போது வைரலாகிவருகிறது.