வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடல்நிலை மிக கவலைக்கிடம்..! சி.என்.என் ஊடகம் தகவல்.!

North Korean leader is in grave danger after surgery


North Korean leader is in grave danger after surgery

வட கொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜாங் அன் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக பிரபல ஊடகம் CNN செய்தி வெளியிட்டுள்ளது.

உலக அளவில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர் வட கொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜாங் அன். உலகமே கொரோனா வைரஸின் பிடியில் சிக்கித்தவைக்கும்போது அசலாட்டக்க அணுகுண்டு சோதனை நடத்தி அமெரிக்காவுக்கே குடைச்சல் கொடுத்தவர்.

North Korea

இதனிடையே தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில்கூட கலந்துகொள்ளாமல் கிம் ஜாங் அன் தவிர்த்துவந்தார். கொரோனா அச்சம் காரணமாக அவர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளாமல் இருக்கலாம் என கூறப்பட்டது.

ஆனால், சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர்  கிம் ஜாங் அன் உடல் நிலை மிக கவலைக்கிடமாக உள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவல் தற்போது உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.