உலகம்

உயிருடன் மீண்டுவந்தார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்.! பலநாள் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.! புகைப்படத்துடன் வெளியான செய்தி.!

Summary:

North korea president kim jong attend public event

கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு அடுத்தபடியாக விவாதிக்கப்பட்ட விஷயங்களில் ஓன்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா என்பதுதான். கடந்த மாதம் 15 ஆம் தேதி தனது தாத்தாவின் பிறந்தநாளில் கூட கலந்துகொள்ளாத கிம் ஜாங் உன் அதன்பிறகு எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாததே கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாக கூறப்பட்டதற்கு முக்கிய காரணம்.

அதிக புகைப்பழக்கம், உடல் எடை, முறையற்ற உணவு பழக்கங்களால் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இதயத்தில் கோளாறு ஏற்பட்டதாகவும், இதனால் நடந்த அறுவை சிகிச்சையில் கிம் ஜாங் உன் உயிர் இழந்துவிட்டதாகவும், அல்லது மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால், அதிபரின் உடல்நிலை குறித்து வடகொரியா எந்த ஒரு அதிகாரபூர்வ தகவல்களையும் வெளியிடாமல் இருந்தது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று கிம் ஜாங் உன் திடீரென பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள சன்ச்சூன் என்ற இடத்தில் பிரமாண்ட உர தொழிற்சாலை ஒன்றினை வடகொரியா அதிபர் திறந்துவைத்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement