ஊரடங்கால் ஆபாச வீடியோ பார்ப்பது 95% அதிகரிப்பு..! வாட்ஸ் ஆப், கூகுள், ட்விட்டருக்கு நோட்டீஸ்.!



ncpcr-issues-notice-to-google-twitter-whatsapp-over-chi

கொரோனா ஊரடங்கு சமயத்தில் குழந்தைகள் சம்மந்தமான ஆபாச படம் பார்ப்பது 95 % அதிகரித்திருப்பதாக கூகுள் வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாட்டுக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் வரும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு என்பதால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். இதனால் இணையதளங்களின் பயன்பாடு பலமடங்கு அதிகரித்துள்ளது. அதேநேரம், ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளநிலையில் தற்போது சிறார் ஆபாச படங்களை பார்ப்பது 95 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சில செயலிகள் மூலம் குழந்தைகளுக்கு எதிரான ஆபாச பொருட்கள் அனுப்பப்படுவது தொடர்பாக கூகுள் நிறுவனத்துக்கு கேள்வி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

மேலும் வாட்ஸ்அப் குழுக்களிலும் இது போன்ற பொருட்கள் கிடைப்பதாகவும், இத்தைகைய வாட்சாப் குழுக்களில் இணைவதற்கான இணைப்பு அழைப்புகள் ட்விட்டரில் பகிரப்பட்டதையும், அவற்றை அனுமதிப்பது தொடர்பாகவும், பதில் அளிக்குமாறு வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.