அழகனான 11 வயது மகளின் வெட்டப்பட்ட தலையுடன் சாலையில் நிர்வாணமாக நடந்து வந்த பெண்.! அச்சத்தில் உறைந்த மக்கள்!

அழகனான 11 வயது மகளின் வெட்டப்பட்ட தலையுடன் சாலையில் நிர்வாணமாக நடந்து வந்த பெண்.! அச்சத்தில் உறைந்த மக்கள்!


Mother killed 11 years daughter in Ukraine

பெற்ற தாய் தனது 11 வயது மகளின் தலையை துண்டாக வெட்டி கையில் வைத்துக்கொண்டு சாலையில் நிர்வாணமாக நடந்துவந்த சம்பவம் பெரும் அதிதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நாட்டின் கார்கில் பகுதியில் தனது அண்ணன் மற்றும் தனது 11 வயது மகளான கிறிஸ்டினாவுடன் வசித்து வந்தவர் 38 வயதான டயாட்டினா. சமபவத்தன்று டயாட்டினா தான் தங்கி இருந்த குடியிருப்புக்கு வெளியே நிர்வாண நிலையில், இரத்தம் சொட்ட சொட்ட கத்தி ஒன்றை கையில் வைத்துக்கொண்டு, மற்றொரு கையில் ஒரு தலையை பிளாஸ்டிக் கவரில் வைத்துக்கொண்டு நடந்து சென்றுள்ளார்.

இதை பார்த்து பயந்துபோன டயாட்டினாவின் அண்ணன், தன் வீடிக்கருள் சென்று பார்த்தபோது அங்கு டயாடினாவின் மகள் தலையில்லாமல் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினரும் டயாடினாவின் செயலை பார்த்து அதிர்ந்துபோன நிலையில், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டயாடினாவை கைது செய்ய முயற்சித்தபோது அவர்களையும் கத்தியால் குத்தி விடுவேன் என டயாடினா மிரட்டியுள்ளார். இந்நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பிறகு போலீசார் டயாடினாவை கைது செய்தனர்.

டயாட்டினா ஏன் அவரது மகளை கொலை செய்தற் என்பதற்கான காரணம் தெரியவில்லை. வேலைக்கு சென்றுவரும் தன் சகோதரி ஏழ்மையாக இருந்தாலும், அந்த அளவிற்கு சமூகத்தில் பின்தங்கியவர் இல்லை என்றும், எந்த ஒரு மது பழக்கம், போதை பழக்கத்திற்கும் அவர் அடிமை இல்லை என கூறியுள்ளார்.

டயாட்டினாவின் மகள் மிகவும் அழகாக இருப்பர் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். பெற்ற தாயே மகளை துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.